செய்திகள்,திரையுலகம் ஹீரோவாக நடிக்க 1 கோடி கேட்கும் கானா பாலா!…

ஹீரோவாக நடிக்க 1 கோடி கேட்கும் கானா பாலா!…

ஹீரோவாக நடிக்க 1 கோடி கேட்கும் கானா பாலா!… post thumbnail image
சென்னை:-கானா பாலாவின் பாடகராக, பாடலாசிரியராக ‘அட்டகத்தி’ படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பா.ரஞ்சித். அட்டகத்தி படத்தில் நடுக்கடலில் கப்பலில் இறங்கி தள்ள முடியுமா என்ற பாடல் சூப்பர்ஹிட்டாகி, கானா பாலாவை பிரபலமாக்கியது.

தொடர்ந்து அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி மாபெரும் புகழை அடைந்துவிட்டார். அட்டகத்தி படத்திற்கு சில ஆயிரங்கள் சம்பளம் வாங்கிய கானா பாலா இப்போது பிரபலமான பாடகராக, பாடலாசிரியராக, நடிகராகவும் ஆகிவிட்டார். ஒருநாளைக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இதற்கிடையில் கானா பாலா ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன.

தற்போதைய தகவல் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க முன் வந்தவர்கள் அத்திட்டத்தை கைவிட்டுவிட்டனராம்.காரணம் படத்தின் கதையைக் கூட கேட்க ஆர்வம் காட்டாத கானா பாலா, ஒரு கோடி சம்பளம் கொடுக்கணும் என்று எடுத்த எடுப்பிலேயே கண்டிஷன் போட்டிருக்கிறார். இதனால் தான் வந்தவர்கள் அத்திட்டத்தை கைவிட்டுவிட்டனராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி