அரசியல்,செய்திகள் வெளிநாட்டில் போலி மது விற்றதால் கைதான இந்தியர்கள்…!

வெளிநாட்டில் போலி மது விற்றதால் கைதான இந்தியர்கள்…!

வெளிநாட்டில் போலி மது விற்றதால் கைதான இந்தியர்கள்…! post thumbnail image
ரியாத் :- சவூதி அரேபியா நாட்டில் உள்ள அல்-கர்ஜ் பகுதியில் சிலர் போலி மது வகைகளை தயாரித்து, அவற்றை இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மது என்ற பெயரில் சந்தைப்படுத்தி அதிக லாபம் சம்பாதித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள சில வீடுகளை சோதனையிட்ட போலீசார், ஒரு வீட்டில் பிளாஸ்டிக் கேன்களில் உள்ள ‘விஸ்கி’யை பாட்டில்களில் நிரப்பி மிகவும் பிரபலமான ‘கிங் ராபர்ட் II’ என்ற பெயரில் தயாரித்து வந்தது தெரியவந்தது.

இந்த போலி மது தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்த 5 உள்நாட்டு ஆசாமிகளையும், அதில் பணியாற்றிய 15 இந்தியர்களையும் கைது செய்த போலீசார், அந்த கும்பலிடம் இருந்து ஏராளமான அபினையும் கைப்பற்றியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி