அந்த வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், பெட்ரோலுக்கு ரூ.1.69-ம், டீசலுக்கு 50 காசுகளும் உயர்த்தப்பட்டன. இதைத்தொடர்ந்து சமையல் எரிவாயு விலையையும் இந்தியன் ஆயில் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதன்படி மானியம் அல்லாத எரிவாயு சிலிண்டருக்கு ரூ.16.50 உயர்த்தப்பட்டு உள்ளது. சமையல் எரிவாயு நுகர்வோருக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் மத்திய அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.இந்த புதிய விலையின்படி சென்னையில் மானியம் அல்லாத சிலிண்டர் விலை ரூ.924 ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விலை உயர்வு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் கூறியுள்ளது.இதற்கிடையே விமான எரிபொருளும் 0.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்தியில் பா.ஜனதா தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது பெட்ரோல், டீசலுடன் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி