ஆசிய கண்டத்திலிருந்து நாக்- அவுட் பிரிவிற்கு எந்த அணியும் பங்கேற்காத நிலையில் தென்கொரியாவும் முதல் சுற்று நிலைகளிலேயே கடைசி ஆசிய நாடாக வெளியேறியது. கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளை ஜப்பானுடன் இணைந்து நடத்திய தென்கொரியா அப்போது கால் இறுதிச் சுற்று வரை முன்னேறியது.ஆனால் அதன்பின் அவர்களால் தங்களின் செயல்திறனை மேம்படுத்திக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தற்போது நடைபெற்றுவரும் போட்டிகளிலும் தங்கள் அணி சீக்கிரமாகவே வெளியேறியது ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியது. தோல்வியுற்று நேற்று கொரியாவிற்குத் திரும்பிய கால்பந்து அணி வீரர்கள் இன்சியான் விமான நிலையத்தில் ஒன்றாக நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தனர்.
இந்த புகைப்படத்தின் மீது அங்கு கிடைக்கும் பாரம்பரியமான யியோட் என்ற இனிப்பை வீசி அதை சாப்பிடுமாறு கத்தும் ரசிகர் ஒருவரின் உணர்ச்சிகளை உள்ளூர் மீடியாக்கள் வெளியிட்டிருந்தன.இது அங்கு பொதுவாக கோபத்தில் கூறப்படும் சாபம் என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பல ரசிகர்கள் இறுதி சடங்கு நடைபெறுவது போன்ற ஒரு விளம்பரத்தை வடிவமைத்து அதில் தென் கொரிய கால்பந்து அணி இறந்துவிட்டதாக வாசகத்தையும் எழுதி வீரர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாகப் பிடித்திருந்தனர்.கடந்த 2002 தென் கொரிய கால்பந்து அணியின் கேப்டனாக இருந்து தற்போது தங்கள் நாட்டு அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டுவரும் ஹோங் மியுங்-போ ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் விளையாடியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி