செய்திகள்,திரையுலகம் சல்மான், ஷாரூக்கான் படங்களில் நடிக்க மறுத்த விஜய் பட வில்லன்!…

சல்மான், ஷாரூக்கான் படங்களில் நடிக்க மறுத்த விஜய் பட வில்லன்!…

சல்மான், ஷாரூக்கான் படங்களில் நடிக்க மறுத்த விஜய் பட வில்லன்!… post thumbnail image
சென்னை:-அஜித் நடித்த ‘பில்லா 2’, விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படங்களில் முக்கிய வில்லனாக நடித்தவரும், தற்போது சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருப்பவருமான வித்யுத் ஜம்வால் ஷாரூக் கான் தற்போது நடித்து வரும் ‘ஹேப்பி நியூ இயர்’, சல்மான் கான் அடுத்து நடிக்கப் போகும் ‘பிரேம் ரதன் தான் பாயோ’ ஆகிய படங்களில் நடிக்க வித்யுத் மறுத்து விட்டாராம்.

அவர் தனி ஹீரோவாக நடிக்க கிடைத்த வாய்ப்புகளால்தான் அவர்களின் படங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டார் என்கிறார்கள். பிரபல இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வித்யுத் பேசி வருகிறாராம்.ஃபோர்ஸ், கமாண்டோ, புல்லட் ராஜா ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றதன் மூலம் தனி ஹீரோவாக நடிக்க வித்யுத் முயன்று வருகிறாராம். அதனால், ஷாரூக், சல்மான் படங்களில் நடிக்க விருப்பமில்லை என அவர் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார் என்கிறார்கள். அதோடு, முன்னணி ஹீரோயின்கள் மட்டுமே அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போடுகிறாராம்.

சிலர் அவரை நடிக்க வைக்க அணுகிய போது அவர்களிடம் முன்னணி நடிகைகளைத்தான் நாயகியாக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று சொன்னாராம். ஆனால், நடிகருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதை மறுக்கின்றன. அவர்கள் கேட்ட தேதியில் ஏற்கெனவே ‘யாரா’ படத்தில் நடிக்க கொடுத்து விட்டதால்தான் சல்மான் கான், ஷாரூக் கான் படங்களில் நடிக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி