அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சசிதரூரின் மனைவி இறப்பில் திடீர் திருப்பம்… – எய்ம்ஸ் டாக்டர் குற்றச்சாட்டு!

சசிதரூரின் மனைவி இறப்பில் திடீர் திருப்பம்… – எய்ம்ஸ் டாக்டர் குற்றச்சாட்டு!

சசிதரூரின் மனைவி இறப்பில் திடீர் திருப்பம்… – எய்ம்ஸ் டாக்டர் குற்றச்சாட்டு! post thumbnail image
புதுடெல்லி :- முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஜனவரி மாதம் 17–ந் தேதி டெல்லி லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசிதரூர் அன்றைய தினம் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு ஓட்டலுக்கு திரும்பிய போது அவர் பிணமாக கிடந்ததுது தெரிய வந்தது.

உடல்நலக் குறைவு காரணமாக சுனந்தா சிகிச்சை பெற்று வந்தார். அதிக டோஸ் மாத்திரைகள் சாப்பிட்டதால் இறந்து இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் ஓட்டலில் வைத்து சுனந்தாவுக்கும், சசிதரூக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் சசிதரூர் காங்கிரஸ் கூட்டத்துக்கு சென்று விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சுனந்தா உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சுனந்தா இயற்கை மரணம் அடைந்தார் என்று பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் சர்ச்சை முடிவுக்கு வந்தது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் தற்போது ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை டாக்டர் சுதிர் குப்தா இதில் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

டாக்டர் சுதிர் குப்தா, சுனந்தா உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் குழுவின் தலைவர் ஆவார். ‘‘சுனந்தா இயற்கை மரணம்’’ அடைந்தார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடுமாறு உயர் அதிகாரிகள் தன்னை கட்டாயப்படுத்தினர். நிர்ப்பந்தப்படுத்தி அறிக்கை பெற்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இது பற்றி டாக்டர் குப்தா தற்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கும், ஊழல் கண்காணிப்பு கமிட்டிக்கும் புகார் மனுக்கள் அனுப்பி உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி