உண்மையில் அமரகாவியம் சத்யாவின் முதல் படமே அல்ல. ஆர்யாவின் தம்பி சத்யாவின் முதல் படம் படித்துறை. 2009 ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்தப் படத்தையும் ஆர்யாதான் தயாரித்தார். படித்துறை படத்தின் இயக்குநர் வேறு யாருமல்ல பாலாவின் உதவியாளரான சுகாதான்.படித்துறை படத்தை வெளியிடாமல் கடந்த 5 வருடங்களாக கிடப்பில் போட்டு வைத்துள்ளார் ஆர்யா. படித்துறை படத்தை தயாரித்ததே இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்டுக்குக் கணக்குக் காட்டுவதற்காகத்தான் என்று திரையுலகில் சொல்லப்படுகிறது. படித்துறை படத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால், சத்யா நடிப்பில் ஏற்கனவே புத்தகம் என்ற படம் வெளியாகி உள்ளது.
டிவி நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கிய படம் இது. சத்யா நடித்த காதல் 2 கல்யாணம் என்ற படமும் எட்டுத்திக்கும் மதயானை என்ற படமும் முடிவடைந்தநிலையில் வியாபாரம் ஆகாமல் முடங்கிக் கிடக்கின்றன. இந்த விஷயங்கள் எல்லாம் மறைத்துவிட்டு, சத்யாவை நான் ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதை ஜீவா சங்கர் செய்து விட்டார். இதுபற்றி ஆர்யா என்னிடம் சொல்லவில்லை என்று பாலா சொன்னது தான் பச்சைப் பொய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி