சென்னை:-அஜீத் நடித்த ஆழ்வார் படத்தில் அவரது தங்கையாக நடித்தவர் ஸ்வேதா. அதன் பிறகு வள்ளுவன் வாசுகி, மீராவுடன் கிருஷ்ணா, இதயம் திரையரங்கம் படத்தில் நடித்தார். கடைசியாக நடித்த நான்தான் பாலா படம் சமீபத்தில் ரிலீசானது.
சற்று எடை கூடுதாக இருந்த ஸ்வேதாவுக்கு அதனாலேயே பல படவாய்ப்புகள் பறிபோனது. இதனால் தனது எடையை 5 கிலோ வரை குறைத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-கூடுதல் எடையால் சில வாய்ப்புகள் தவறியது உண்மைதான். அந்த கேரக்டருக்கு ஒல்லியான பெண் வேண்டும் என்பதால்தான். இப்போது 5 கிலோ வரை எடை குறைத்து விட்டேன்.
பயணங்கள் தொடரும், கம்பன் கழகம், வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறேன். பூலோகம் படத்தில் டி.வி. நிருபராக நடித்திருக்கிறேன். இதுவரை குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்து வந்தாலும் தொடர்ந்து மார்டன் கேரக்டர்களிலும் நடிப்பேன். என்கிறார் ஸ்வேதா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி