இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஹன்சிகாவும், ஸ்ருதிஹாசனும் நாயகிகளாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வில்லனாக ‘நான் ஈ’ சுதீப்பும், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிகை ஸ்ரீதேவி இந்த படம் மூலம் அறிமுகமாவதோடு, முக்கிய வேடத்திலும் நடிக்கிறாராம்.
இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் தேர்வாகியுள்ளார். இவர் ஏற்கெனவே விஜய் நடித்த ‘சச்சின்’ படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதுகுறித்து தேவிஸ்ரீ பிரசாத் கூறும்போது, சமீபத்தில்தான் ‘தல’ அஜீத் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது மீண்டும் விஜய் ல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த சிம்புதேவனுக்கும், விஜய்க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி