பேஸ்புக் போட்டியை எதிர்கொள்வதற்காக கூகுள்+ஐ அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் கூகுள் நிறுவனத்துக்கு ஏற்பட்டது. இப்போதும் லட்சக்கணக்கானோர் ஆர்குட்டைப் பார்வையிடுகின்றனர் என்று கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இணையதளத் தகவல் வெளியீட்டின்படி 50 சதவிகித ஆர்குட் பயனாளர்கள் பிரேசிலிலும், 20 சதவிகிதப் பயனாளர்கள் இந்தியாவிலும் இருப்பதாகத் தெரியவருகின்றது.ஆனால் மந்தமான வர்த்தகப் பயன்பாட்டைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் இந்த தளத்தை மூட இருப்பதாக ஆர்குட்டின் பொறியியல் இயக்குனரான பாலோ கோல்கர் நேற்று தகவல் வெளியிட்டுள்ளார்.
தற்போது இருக்கும் பயனாளார்கள் தங்களின் தகவல் பக்கங்களை பரிமாறிக்கொள்ளமுடியுமே தவிர புதிய வருகைகள் நேற்று முதல் நிறுத்தப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.கடந்த பத்து வருடங்களில் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் யூ டியூப், பிளாகர், கூகுள்+ போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஆர்குட்டைவிட அதிக வளர்ச்சி வாய்ப்பைப் பெற்றுவிட்டதால் ஆர்குட் தளத்திற்குப் பிரியாவிடை அளிக்க முடிவு செய்துள்ளோம் என்று கோல்கர் விளக்கியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி