ஆனால் அங்கு விழுந்தது ஏதும் விமானத்தின் பாகங்கள் இல்லை என பின்பு உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் விமானம் செயற்கைக்கோளை தொடர்புகொள்ள முயன்ற நேரம், சூழலை பார்க்கையில் அதில் திடீர் என்று மின்வினியோகம் துண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என கூறப்படுகிறது.எனவே விமானத்தில் மின்சாரம் இல்லாததால் தான் இப்படி அனுமதி கேட்டிருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமானத்தில் மின் வினியோகம் இல்லாமல் இருந்திருக்கிறது என்றால் அதை யாரோ கடத்த முயன்றபோது தான் நடந்திருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் விமான போக்குவரத்து நிபுணரான பீட்டர் மாரோஸ்கி தெரிவித்துள்ளார்.மேலும் விமானத்தில் மின்வெட்டை ஏற்படுத்திவிட்டு மீண்டும் மின் வினியோகத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இதை செய்ய விமானம் பற்றி நன்கு தெரிந்த அறிவாளியான ஒரு நபர் அல்லது விமானியால் மட்டுமே முடியும் என்று பீட்டர் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி