உலகின் சிறந்த நாடுகள் பட்டியலை ஒரு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில், ஐ.நா., உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் உலக அமைப்புகள் வெளியிட்டுள்ள சிறந்த நாட்டுக்கான அளவுகோல்கள் அடிப்படையில், நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.
அதன்படி, இந்தியா 81-வது இடத்தில் உள்ளது. ஆனால், சீனாவுடன் ஒப்பிடுகையில் இது பெருமைக்குரியதுதான். ஏனென்றால், சீனா 107-வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில், அயர்லாந்துக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. மனித இனத்துக்கும், பூமிக்கும் ஆற்றிய பணிக்காக இக்கவுரவம் கிடைத்துள்ளது. பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகியவை அடுத்தடுத்து இடங்களைப் பிடித்துள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி