அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கச்சத்தீவில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என மத்திய அரசு விளக்கம்!…

கச்சத்தீவில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என மத்திய அரசு விளக்கம்!…

கச்சத்தீவில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என மத்திய அரசு விளக்கம்!… post thumbnail image
புதுடெல்லி:-கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி மீனவர் பேரவை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளித்த பதில் மனுவில் தமிழக மீனவர்களுக்கு எதிரான கருத்தை கூறியிருந்த நிலையில், தற்போது புதிதாக பதவியேற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் புதிதாக கூடுதல் பதில் மனுவை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமையில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

அதே சமயம் அங்கு மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்திக்கொள்ளவும், ஓய்வெடுத்துக் கொள்ளவும் உரிமை உண்டு என்று கூறியுள்ள அரசு 1974-76 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் படி இந்திய மீனவர்களுக்கு இந்த பராம்பரிய உரிமை உள்ளது என தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவதை அந்நாட்டு அரசு நியாயப்படுத்தக் கூடாது எனவும் மத்திய அரசு தனது மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி