இதனால், இன்றைய வெற்றி – தோல்வி ‘பெனால்டி ஷூட்’டில் தான் இறுதி செய்யப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், கூடுதல் நேரத்தின் 92-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஆண்ட்ரே ஸ்குயெர்ல் தனது நாட்டின் சார்பில் முதல் கோலினை பதிவு செய்தார்.120-வது நிமிடத்தில் அதே நாட்டை சேர்ந்த மற்றொரு வீரரான மெசுட் ஓசில் இரண்டாவது கோலையும் அடிக்க, ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் பலத்த கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
அந்த ஆரவாரத்தை தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ளும் விதமாக அல்ஜீரியாவின் சார்பில் அப்டெல்மவ்மென் ட்ஜாபு முதல் கோலினை பதிவு செய்ய, அதற்கு அடுத்த ஓரிரு நிமிடங்களில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரம் முடிவடைந்ததை குறிக்கும் நடுவரின் விசில் ஒலி, ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.இதனையடுத்து 2-1 என்ற கணக்கில் ஒரு கோல் வித்தியாசத்தில் அல்ஜீரியாவை வென்ற ஜெர்மனி அணி காலிறுதிக்கு முன்னேறியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி