சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு இது தொடர்பாக விசாரணை நடத்தி சுராசுக்கு 9 போட்டியில் விளையாட தடைவிதித்தது.அவர் மீதான நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்தன. இந்த தடையை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக அவர் அறிவித்து இருந்தார்.இதற்கிடையே இத்தாலி வீரர் ஷிலினியை கடித்ததற்காக சுராஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:–
கடந்த சில தினங்களாக நான் என் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் செய்த தவறுகளால் விதிக்கப்பட்ட தடையால் குடும்பத்தினருடன் அமைதியாக இருக்கிறேன்.எனது இந்த செயலுக்காக இத்தாலி வீரர் ஷிலினியிடமும், அனைத்து கால்பந்து குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.இந்த சம்பவத்துக்காக நான் வருத்தப்படுகிறேன். கடிக்கும் செயலில் நான் இனி ஒருபோதும் ஈடுபடமாட்டேன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி