ஆனால் தங்கள் படங்களின் ஆடியோ விழாக்களுக்குகூட செல்லாத அவர்கள் ஆர்யா தயாரித்துள்ள இந்த படத்தின் விழாவுக்கு வந்திருப்பதின் முக்கிய காரணம் அவர் அனைவரிடமும் அன்பாக பழகுவதுதான்.எனக்குகூட இன்றைக்கு உடம்புக்கு சரியில்லை. ஆனால், ஆர்யா கண்டிப்பாக விழாவுக்கு வந்து கதாநாயகனாக நடிக்கும் என் தம்பி சத்யாவை வாழ்த்த வேண்டும் என்று சொன்னதும் என்னால் மறுக்க முடியவில்லை. அதனால்தான் காய்ச்சலுடன் வந்தேன்.
மேலும், ஆர்யாவுடன் இணைத்து நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா மற்றும் நான் என எல்லாரை பற்றியும் கிசுகிசுக்கள் வருகிறது. அதற்கு காரணம் ஆர்யா மணிக்கணக்கில் கடலை போடுவதுதான். ஆனால் அவர் பேடு கடலை போடவில்லை. நல்ல கடலைதான் போடுகிறார். மேலும், அவர் அப்படி நல்ல கடலை போடுவதினால்தான் எல்லா நடிகைகளுடன் அவருடன் அன்பாக பழகுகிறோம் என்கிறார் பூஜா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி