இது குறித்து அவர் கூறியதாவது, நான் எப்போதும் சிறந்த ஒன்றையை வெளிப்படுத்த விரும்புகிறேன். ஒரு படத்திற்காக மட்டுமே என்னுடைய முழு அர்ப்பணிப்பையும் தர விரும்புகிறேன். இப்போது எந்த படத்திற்கும் நான் நியாயமாக நடந்து கொள்ள முடியவில்லை என்றே நினைக்கிறேன். அதனால், இனி வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்றபடி நடந்து கொள்ளப் போகிறேன். இப்போது ஒரு இந்திப் படத்தில் மட்டும் நடித்து வருகிறேன்.
தமிழில் சில படங்களில் நடித்து வருகிறேன், இன்னும் இரண்டு படங்களில் நடிக்கப் போகிறேன். இவற்றையெல்லாம் முடித்து விட்டு, அடுத்த ஆண்டு முதல் புதிதாக ஆரம்பிக்க உள்ளேன். நிஜமாகவே நடிக்கும் படங்களை குறைத்துக் கொண்டு தேர்ந்தெடுத்து சில படங்களில் மட்டுமே நடிக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி