அதனால், இதுவரை மற்ற காமெடியன்களுடன் இணைந்து நடித்து வந்தவர், இப்போது சின்ன படமாக இருந்தாலும் தனி காமெடியனாக தன்னை நடிக்க வைத்தால் அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்.தற்போது அவருக்கு ஓரளவு மார்க்கெட் இருப்பதால் அவரை நம்பி டைரக்டர்கள் வாய்ப்பு கொடுத்தும் வருகிறார்கள். ஆனால், எந்த காட்சியாக இருந்தாலும், சிங்கில் டேக்கில் அவர் ஓ.கே செய்வதில்லையாம். பல டேக் வாங்குகிறாராம். அதிலும் அதிக டயலாக் பேசி நடிக்க வேண்டும் என்றால் ஒரு காட்சியை முடிக்க ஒரு நாள் ஆக்கி விடுகிறாராம்.
இதனால், பட்ஜெட் படத்தை இயக்கும் டைரக்டர்கள், இமான் அண்ணாச்சியை நினைத்து பயப்படுகிறார்கள்.அதனால், இதுவரை எத்தனை பெரிய சீன் என்றாலும் ஸ்பாட்டில் பார்த்துக்கொள்வோம் என்று இருந்த இமான் அண்ணாச்சி, இப்போது அடுத்த நாள் பெரிய சீன்களில் நடிக்க வேண்டியதிருந்தால் முந்தின நாளே டயலாக் பேப்பரை வீட்டுக்கு வாங்கிச்சென்று மனப்பாடம் செய்து விட்டு வருகிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி