செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ஜப்பானில் பிரபலமாகி வரும் ரோபோட் ரெஸ்ட்டாரண்ட்!…

ஜப்பானில் பிரபலமாகி வரும் ரோபோட் ரெஸ்ட்டாரண்ட்!…

ஜப்பானில் பிரபலமாகி வரும் ரோபோட் ரெஸ்ட்டாரண்ட்!… post thumbnail image
டோக்கியோ:-ஜப்பான் நாட்டில் பெண் ரோபோட்களின் நடனம் மற்றும் சண்டை காட்சிகளை பார்ப்பதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள நவீன ரெஸ்ட்டாரண்ட் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள ஷிஞ்சுக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ரெஸ்ட்டாரண்ட்டில் இசைக்கலைஞர்களின் இசைக்கு ஏற்ப ஆஜானுபாகுவான உடலமைப்பில் உள்ள ரோபோக்கள் நடனமாடியும், ஒன்றோடொன்று ஆவேசமாக சண்டையிட்டும் பார்வையாளர்களை அசத்தி வருகின்றன.

முன்பதிவு செய்து கொண்டு இங்கு வந்து மது அருந்தியபடி ரோபோக்களின் சாகசங்களை காண வரும் வாடிக்கையாளர்கள், எக்காரணத்தை கொண்டும் அவற்றை தொடக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி