ஆர்யா, விஜய்சேதுபதி, விஷால், அமலாபால், டாப்ஸி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.இப்போது இதன் கூடுதல் சிறப்பு அம்சமாக ஒரு பாடல் காட்சியை எடுத்து வருகிறார் பார்த்திபன். சோகம் போதும் நிப்பாட்டிடு, சொர்க்கம் போக டிக்கெட் எடு என தொடங்கும் இந்த பாடல் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதத்தில் இருக்குமாம். மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
தமன் இசை அமைத்திருக்கிறார். ஹரிசரன், வெங்கட்பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, நகுல் பாடியிருக்கிறார்கள்.இந்த பாட்டில் முன்னணி நட்சத்திரங்களையெல்லாம் ஆட வைத்துக் கொண்டிருக்கிறார் பார்த்திபன். பாட்டுக்கு நடனம் அமைப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். பத்து ஹீரோக்களை ஆட வைப்பது பார்த்திபனின் திட்டம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி