செய்திகள்,திரையுலகம் தடைகளை தாண்டி வெளியான கன்னட ஜெயலலிதா!…

தடைகளை தாண்டி வெளியான கன்னட ஜெயலலிதா!…

தடைகளை தாண்டி வெளியான கன்னட ஜெயலலிதா!… post thumbnail image
சென்னை:-கன்னடத்தின் பிரபல காமெடி நடிகர் சரண். இதுவரை 50 படங்கள் வரை நடித்துள்ள சரண் ஹீரோவாக மட்டும் 10 படங்களில் நடித்திருக்கிறார்.மலையாளத்தில் திலீப்குமார் நடிப்பில் வெளிவந்த மாயமோகினி படத்தை கன்னடத்தில் ஸ்ரீமதி ஜெயலலிதா என்ற பெயரில் ரீமேக் செய்தார் சரண்.

மாயமோகினியில் திலீப் முழு படத்திலும் பெண் வேடத்தில் நடித்திருந்தார். அதேபோல சரணும் பெண் வேடத்தில் நடித்தார். அந்த கேரக்டருக்கு ஜெயலலிதா என்று பெயர் வைத்து படத்தின் பெயரை ஸ்ரீமதி ஜெயலலிதா என்று வைத்தார். கர்நாடக மாநில அதிமுகவினர் படத்தின் டைட்டிலை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். ஆனால் வழக்கில் சரணுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. அதன்பின் மிரட்டல்கள் வந்தது.

எல்லாவற்றையும் மீறி கன்னடத்தில் ஸ்ரீமதி ஜெயலலிதா ரிலீசானது. அதோடு படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. சரணுடன் ஹரிஷ் ராம், திஷா பாண்டே, ஐஸ்வர்யா தேவ், நடித்துள்ளனர். ஜி.குமார் இயக்கி உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி