செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகர் ஆர்யா படவிழாவில் பங்கேற்ற பிரபல நடிகைகள்…!

நடிகர் ஆர்யா படவிழாவில் பங்கேற்ற பிரபல நடிகைகள்…!

நடிகர் ஆர்யா படவிழாவில் பங்கேற்ற பிரபல நடிகைகள்…! post thumbnail image
நடிகர் ஆர்யா தயாரிக்கும் படம் அமர காவியம். இதில் அவரது தம்பி சத்யா நாயகனாகவும், மியா ஜார்ஜ் நாயகியாகவும் நடிக்கின்றனர். ஜீவா ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது.

விழாவில் நடிகை நயன்தாரா பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட நடிகை திரிஷா பெற்றுக்கொண்டார். நடிகர்கள் ஆர்யா, பார்த்திபன், ஸ்ரீகாந்த், விக்ராந்த், உதயநிதி, நடிகைகள் பூஜா, ரூபாமஞ்சரி, டைரக்டர்கள் லிங்குசாமி, பாலா, பிரபு சாலமன், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவில் நயன்தாரா, திரிஷாவிடம் ஆர்யாவை எல்லா நடிகைகளுக்கும் பிடிக்கிறதே எப்படி என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த திரிஷா, இனிமையாக பழகுபவர் ஆர்யா என்றார், நயன்தாரா கூறும் போது, மற்றவர்களுக்கு உதவிகள் செய்பவர் ஆர்யா, எல்லோரிடமும் சகஜமாக பழகுவார் என்றார். டைரக்டர் பாலா பேசும் போது, ஆர்யா திறமையான நடிகர் மட்டுமல்ல, சிறந்த பிசினஸ்மேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி