சென்னை:-நடிகர் ஆர்யா தயாரிப்பில் ஜீவா சங்கர் இயக்கியிருக்கும் ‘அமர காவியம்’ படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் இசையினை நயன்தாரா வெளியிட திரிஷா பெற்றுக் கொண்டார்.
தான் நாயகியாக நடித்த படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு கூட வாராத நயன்தாரா, இப்படத்தின் இசையினை வெளியிட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.விழாவில் நயன்தாரா பேசும்போது, ஆர்யா எனது குடும்பத்தில் ஒருவர். அவரது நட்பிற்காகவே இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறேன். படத்தில் நடிக்கும் அனைவரையுமே ஆர்யா நன்றாக கவனித்துக் கொள்வார். மேலும் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களை ஏற்கனவே பார்த்துவிட்டேன். படக்குழுவிற்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி