செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் இந்தியாவில் ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் குழந்தைகள் என ஐ.நா. தகவல்!…

இந்தியாவில் ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் குழந்தைகள் என ஐ.நா. தகவல்!…

இந்தியாவில் ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் குழந்தைகள் என ஐ.நா. தகவல்!… post thumbnail image
நியூயார்க்:-உலக அளவில் 6 லிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர்களில் இன்னும் ஆரம்பக் கல்வியைப் பெறாதவர்கள் மொத்தம் 58 மில்லியன் ஆகும் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஆனால் கடந்த 2007ல் காணப்பட்டதைவிட இப்போது நிலைமை முன்னேறியுள்ளதாகக் கூறும் அந்த அறிக்கை இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தலா ஒரு மில்லியன் சிறுவர்கள் இந்நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2000த்தில் புருண்டி, ஏமன், கானா, நேபாளம், ருவாண்டா, இந்தியா, ஈரான், வியட்நாம் உள்ளிட்ட 17 நாடுகள் பள்ளி செல்லா சிறுவர்களின் உலக எண்ணிக்கையில் கால் பங்கினைக் கொண்டிருந்தன. ஆனால் பத்தாண்டுகளுக்குள் இந்த எண்ணிக்கையை 27 மில்லியனிலிருந்து நான்கு மில்லியனாக அதாவது 86 சதவிகிதமாகக் குறைத்துவிட்டன.இருப்பினும், கல்வி உதவித்தொகை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது, பள்ளி செல்லாப் பிள்ளைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் முன்னேற்றம் இல்லாமை போன்ற பிரச்சினைகள் வரும் 2015க்குள் இந்த நாடுகள் உலகளாவிய ஆரம்பக் கல்வி சாதனையை எட்டுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று யுனெஸ்கோவின் பொது இயக்குனர் இரினா போகொவா தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ல் பாகிஸ்தானில் ஆரம்பக் கல்வி பெறாதவர்களின் எண்ணிக்கை 5.4 மில்லியனாகவும், இந்தோனேசியாவில் 1.3 மில்லியனாகவும் இருந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 15 மில்லியன் சிறுமிகளும், 10 மில்லியன் சிறுவர்களும் சேர்ந்து மொத்தம் 43 சதவிகிதத்தினர் ஆரம்பக் கல்வியைப் பெறாத நிலையிலேயே இருப்பர் என்று யுனெஸ்கோவின் புள்ளி விபரம் எச்சரிக்கின்றது. இந்த நிலை மாறவேண்டுமெனில் கல்வி கற்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்பதை அரசுகள் மதிக்கும்படியான செயல்பாட்டைக் கொண்டுவரும் எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தவேண்டும் என்று இரினா குறிப்பிடுகின்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி