இங்கிலாந்து:-பிரிட்டனில் உள்ள பிரிம்மிங்காம் காவல் நிலையத்தில் போலீஸார் போதை வழக்கு ஒன்றிற்காக லிலோய்ட் பட்லர் (வயது 39) கைது செய்து கொண்டு வந்தனர்.மறுநாள் காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டி கைதியை காவல் நிலைய சிறையில் அடைத்து வைத்து இருந்தனர்.
சிறிது நேரத்தில் கைதி பட்லருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது இதனால் அவர் வலியால் துடித்தார். தனக்கு மருத்துவ உதவி தரும்படி போலீஸாரை அவர் கேட்டுக்கொண்டார்.ஆனால் கைதியின் வேண்டுகோளை காதில் வாங்காத போலீஸார், தங்களது கம்ப்யூட்டரில் ஆபாச படத்தை பார்த்து 3 மணி நேரத்தில் மாரடைப்பு வந்த கைதி மரணம் அடைந்துவிட்டார்.
கைது செய்யப்பட்ட ஒருவருக்கு தரவேண்டிய அடிப்படை மருத்துவ உதவிகளை செய்யாமல் பணி நேரத்தில் ஆபாச படம்பார்த்த இரண்டு போலீஸார்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் ஆபாச படம் பார்த்தது அங்கிருந்த சிசிடிவி கேமராவினால் கண்டுபிடிக்கப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி