செய்திகள்,திரையுலகம் படமாகும் சுஜாதாவின் படைப்புகள்…!

படமாகும் சுஜாதாவின் படைப்புகள்…!

படமாகும் சுஜாதாவின் படைப்புகள்…! post thumbnail image
சுஜாதாவின் படைப்புகள் தொடராகவும் அதற்கு பின்னர் புத்தகமாகவும் வெளிவந்தபோது எல்லோரையும் கவர்ந்த ‘என் இனிய எந்திரா’ மற்றும் ‘மீண்டும் ஜீனோ’ இரண்டுமே ரசிகர்கள் கண்டுகளிக்க திரைப்படமாக உருவெடுக்கிறது.

இந்த கதைகள் வெளிவந்த நேரத்தில், விஞ்ஞான வளர்ச்சியால் எதிர்காலம் எப்படி இருக்ககூடும் என்பதை நமக்கு கண்முன் காட்டியது. விஞ்ஞான வளர்ச்சி பற்றிய விவரமான இந்த கதைகளுக்கு விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாக உள்ள இந்த காலகட்டமே சிறந்த காலம் என தெரிவிக்கிறார்

பிக்செல் கிராப்ட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியும், இப்படங்களின் இயக்குனருமான சித்தார்த். விர்ச்சுவல் கிராபிக்ஸ் என்ற தொழில்நுட்பம் மூலம் நடிகர்களை மட்டுமே நடிக்க வைத்துவிட்டு, இடம், பொருள் ஆகிய மற்ற விஷயங்களை தொழில்நுட்ப முறையில் ஒரு இடத்தில் இருந்தே படமாக்கும் இந்த முறையால் திரைப்படம் படைப்பது எளிதாகும் என்கிறார் சித்தார்த்.

மிக பிரம்மாண்ட முறையில் தயாரிக்கப்படும் ‘என் இனிய இந்திரா’ நாற்பது கோடி ரூபாயில் தயாரிக்கப்படுகிறது. சென்னை தவிர, இங்கிலாந்தில் பைரேட் ஆப் தி கரீபியன், அயர்மேன் 2, மற்றும் கோச்சடையான் படங்களின் மோஷன் கேப்சர் தொழில்நுட்ப வல்லுனர்கள் இயங்கும் சென்ட்ராய்டு மோஷன் கேப்சர் ஸ்டுடியோவிலும் நடைபெற உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி