கணேஷ் வெங்கட்ராம் ஏற்கனவே அபியும் நானும் படத்தில் திரிஷா ஜோடியாக நடித்தார். கமலின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் வாட்டசாட்டமான நேர்மையான போலீஸ் அதிகாரியாக வந்தார். பனித்துளி, தீயா வேலை செய்யனும் குமாரு படங்களிலும் நடித்துள்ளார். தனி ஒருவன் மட்டுமின்றி பள்ளிக் கூடம் போகாமலே, அச்சாரம், முறியடி போன்ற படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.
நயன்தாராவும் தமிழில் பிசியான நடிகையாக உள்ளார். நான்கு படங்கள் கைவசம் உள்ளன. ஏற்கனவே சிம்பு, பிரபு தேவாவுடனான தொடர் காதல் முறிவுகளால் விரக்தியில் இருக்கும் நயன்தாராவுக்கு கணேஷ்வெங்கட்ராமின் நெருக்கம் புத்துணர்ச்சி அளித்துள்ளதாம்.
இது குறித்து கணேஷ் வெங்கட்ராமிடம் கேட்ட போது, நயன்தாராவும் நானும் நட்பாகத்தான் பழகுகிறோம் என்றார். நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்ற வதந்தி எங்கிருந்து பரவியது என தெரியவில்லை என்றும் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி