செய்திகள்,முதன்மை செய்திகள் அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோக்கள் பறிமுதல்…!

அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோக்கள் பறிமுதல்…!

அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோக்கள் பறிமுதல்…! post thumbnail image
சென்னை :- சென்னையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பெரும்பாலான ஆட்டோக்கள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. மீட்டர் போடாமல் ஆட்டோ டிரைவர்கள் தாறுமாறாக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் வட்டார போக்குவரத்து புகார் மையத்துக்கு தகவல் கொடுக்கின்றனர். அதன் அடிப்படையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தொடர் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு சிறப்பு குழுக்கள் ஆட்டோக்களில் மீட்டர் போடப்படுகிறதா? என திடீர் சோதனைகளை செய்து வருகிறது.

ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம், உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சோதனை நடக்கிறது. பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கடந்த மாதம் 24–ந் தேதி முதல் மீண்டும் ஆட்டோக்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாதம் 24–ந் தேதி வரை ஒரு மாதத்தில் அதிக கட்டணம் வசூல், மீட்டர் போடாமல் இயங்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 935 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொடர்ந்து 3 முறை புகாரில் சிக்கினால் சம்பந்தப்பட்ட ஆட்டோக்களின் அனுமதி சீட்டு நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி