அகமதாபாத்:-குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மாநிலத்தின் முதல் பெண் முதல்வரான ஆனந்தி பட்டேல் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், “சமுதாயத்தில் பெண்கள் உயர அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டியது அவசியம். எனவே, எனது அரசு காவல்துறை தேர்வில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது” என்றார்.
முன்னதாக, காந்தி நகரில் ஆயுதப்படை போலீசாரின் பயிற்சி நிறைவு விழாவில் பேசிய முதல்வர் ஆனந்தி பட்டேல், நாட்டிலேயே குஜராத்தில்தான் குற்றங்கள் குறைவு என்று குறிப்பிட்டார்.அமைதியும் மத நல்லிணக்கமும் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. கடந்த பத்தாண்டுகளில் குஜராத் மாநிலம் எந்த ஒரு பெரிய மத கலவரத்தையும் பார்த்ததில்லை. இதுவே வளர்ச்சியை கொண்டு வருவதற்கு எங்களுக்கு உதவியாக இருந்தது என்றும் ஆனந்தி பட்டேல் குறிப்பிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Like this:
Like Loading...
தொடர்புடையவை:-

குஜராத்:-குஜராத்தில் முதல்வர் பதவியில் இருந்து நரேந்திர மோடி விலகியதையடுதது புதிய முதல்வரை தேர்வு செய்ய இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாநில வருவாய் துறை அமைச்சராக உள்ளராக உள்ள ஆனந்தி பென் பட்டேல் குஜராத் முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத்தின் முதல் பெண் முதல்வர் என்ற சிறப்புடன் 72வயதான ஆனந்தி பென் பட்டேல் முதல்வராக விரைவில் பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் கமலா பேனிவால் பதவி பிரமாணம் செய்து…

புதுடெல்லி:-மும்பை ஐகோர்ட்டு சமீபத்தில் ஒரு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. ஐ.ஏ.எஸ். பணியிடங்களில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அம்மனு மீது, தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய…

புதுடெல்லி:-சீன அதிபர் ஜின்பிங், இந்தியாவில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் செய்கிறார். இலங்கை சென்றுள்ள அவர் கொழும்பிலிருந்து, இன்று குஜராத் மாநிலம், ஆகமதாபாத் வந்தடைகிறார். அவருடன் அவரது மனைவி பெங் லியுயான் மற்றும் உயர் மட்டக்குழுவினரும் வருகை தருகின்றனர்.ஆகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தனி விமானத்தில் பகல் 2½ மணிக்கு வந்திறங்கும் சீன அதிபரை மாநில கவர்னர் ஓ.பி.கோலி, முதல்- மந்திரி ஆனந்தி பென்…