செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை கால்பந்து: இத்தாலியை வீழ்த்தியது உருகுவே!…

உலக கோப்பை கால்பந்து: இத்தாலியை வீழ்த்தியது உருகுவே!…

உலக கோப்பை கால்பந்து: இத்தாலியை வீழ்த்தியது உருகுவே!… post thumbnail image
நடால்:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலி மற்றும் உருகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் உருகுவேவின் கேசரஸ் அடித்த பந்தை இத்தாலியின் பபோன் லாவகமாக தடுத்தார்.மீண்டும் ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் உருகுவேவின் சுவாரெஸ் அடித்த பந்தை இத்தாலியின் போனுக்கி அழகாக தடுத்தார்.

ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் உருகுவே வீரரின் தலைக்கு பாயந்து பந்தை அடிக்க முயன்ற பலடோலிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த போது இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்தன.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது முதல் உருகுவே அணி ஆக்ரோஷமாக ஆடியது. ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் உருகுவே வீரர் ரியோசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் இத்தாலியின் மார்ச்சிஸியோ ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் உருகுவே வீரர் கோடின் அற்புதமான கோல் ஒன்றை அடித்து அந்த அணியின் கோல் கணக்கை துவக்கினார். 90வது நமிடம் வரை மேற்கொண்டு கோல் எதுவும் போடாததால் கூடுதலாக ஐந்து நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது.
அதிலும் இரு அணி வீரர்களும், எந்த கோலும் அடிக்காததால் 0-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி உருகுவே அணி வெற்றி பெற்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி