செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய வெடிப் பொருட்கள் கண்டுபிடிப்பு!…

மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய வெடிப் பொருட்கள் கண்டுபிடிப்பு!…

மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய வெடிப் பொருட்கள் கண்டுபிடிப்பு!… post thumbnail image
கெய்ரோ:-பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் மாவீரன் நெப்போலியன். தனது வீரம், வலிமை, போர் தந்திரம் ஆகியவற்றின் மூலம் உலகின் பல நாடுகளை வென்ற இவர், வாட்டர்லூ போரில் தோல்வி அடைந்தார். இப்படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது.

அந்த தோல்வியிலிருந்து நெப்போலியனால் மீளமுடியவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 1816-ம் ஆண்டு பெலன்தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவரது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சென் ஹெலெனாத் தீவில் கழிந்தது.5-5-1821 அன்று தனது 51-வது வயதில் அவர் காலமானார். மெல்லக் கொல்லும் நஞ்சு மூலம் ஆங்கிலேயர்களால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், பரம்பரையாக இருந்து வந்த இரைப்பைப் புற்று நோயால் அவர் இறந்ததாகவும் இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், எகிப்து நாட்டில் உள்ள அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தின் அருகாமையில் உள்ள கடற்பகுதியின் அடியில் மூழ்கிக் கிடக்கும் கப்பல்களின் சிதிலங்களை தேடி வரும் ரஷ்யக் குழுவினர், நெப்போலியனின் கப்பலான ’லி பேட்ரியாட்’டில் அவர் வைத்திருந்த 18-ம் நூற்றாண்டு தயாரிப்பான வெடிப் பொருட்களை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.பாதுகாப்பதற்காகவும், ஆராய்ச்சிக்காகவும் தற்காலிகமாக அவை எகிப்தில் உள்ள கிராண்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி