பிரதமரை சந்தித்த பின் பேசிய அமிர் கூறியதாவது, “தான் எழுப்பிய பிரச்சனைகள் குறித்து உரிய கவனம் செலுத்துவதாக பிரதமர் தன்னிடம் உறுதியளித்தாக” அவர் கூறினார். அவரது மதிப்புமிக்க நேரத்தை என்னை சந்திப்பதற்காக ஒதுக்கி தந்தமைக்கு அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தனது மாற்றத்தை ஏற்படுத்துவோம் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்திருப்பது குறித்தும், தனது நிகழ்ச்சிகளில் பேசப்பட்ட பிரச்னைகள் குறித்தும் இருவரும் விவாதித்தாக தனது டுவிட்டரில் அமிர் பதிவு செய்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இச்சந்திப்பு முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி