26வது நிமிடத்தில் கேமரூனின் மேடிப் முதல் கோலை அடித்து கோல் கணக்கை சமன் செய்தார். 35வது நிமிடத்தில் மீண்டும் நெய்மார் அற்புதமான கோல் அடித்து அணியின் கோல் எண்ணிக்கையை 2 ஆக உயர்த்தினார். இந்த நிலையில் முதல் பாதி ஆட்டம் முடிந்தது. சிறிது நேர ஓய்வுக்கு பின் மீண்டும் 2வது பாதி ஆட்டம் தொடங்கியது. 49வது நிமிடத்தில் பிரேசிலின் பிரெட் 3வது கோல் அடித்தார்.
86வது நிமிடத்தில் பிரேசிலின் பெர்னான்டின்ஹோ தனது அணிக்கு 4வது கோலை பதிவு செய்தார். இரண்டாவது பாதியில் மேற்கொண்டு கோல் எதுவும் விழாததால் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக பிரேசிலின் முன் கள ஆட்டக்காரரான நெய்மார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி