இதன் மூலம் அவர் இந்த உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். 3 ஆட்டத்தில் விளையாடி 4 கோல்கள் அடித்துள்ளார். தாமஸ் முல்லர் (ஜெர்மனி), கரீம் பென்சிமா (பிரான்ஸ்), வான்பெர்சி, ரோபன் (நெதர்லாந்து), ஹலன்சியா (ஈக்வடார்) ஆகிய 5 வீரர்கள் தலா 3 கோல் அடித்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
நெய்மர் நேற்று முதல் கோலை அடித்தது இந்த உலக கோப்பையின் 100வது கோலாகும். 36 ஆட்டத்தில் மொத்தம் 108 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. சராசரி 3 ஆகும். கடந்த உலக கோப்பை போட்டியில் 36 ஆட்டத்தில் 77 கோல்கள்தான் அடிக்கப்பட்டன.
47 ஆட்டத்தில்தான் 100 கோல்கள் அடிக்கப்பட்டன. இந்த உலக கோப்பையில் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால்தான் 36 ஆட்டங்களில் 100 கோல்களை எடுக்க முடிந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி