செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா பயணம்!…

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா பயணம்!…

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா பயணம்!… post thumbnail image
மெல்போர்ன்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் 4ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகளுக்கான ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் டிசம்பர் 4ம் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 12ம் தேதியும், 3-வது டெஸ்ட் மெல்போர்னில் 26ம் தேதியும், கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 3ம் தேதியும் தொடங்குகிறது.

இதனை அடுத்து 3 நாடுகள் ஒரு நாள் போட்டி நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் 3-வது நாடாக இங்கிலாந்து கலந்து கொள்கிறது. 3 நாடுகள் போட்டி ஜனவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நடக்கிறது.ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி, ஆஸ்திரேலிய பயணத்தை மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி