செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடக்கம்!…

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடக்கம்!…

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடக்கம்!… post thumbnail image
லண்டன்:-ஆண்டு தோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் இன்று தொடங்குகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயின் ரபெல் நடால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே ஆகியோர் இடையேத் தான் கடும் போட்டி நிலவுகிறது.

‘களிமண்’ தரையில் முடிசூடா மன்னனாக விளங்கும் நடால் கடந்த முறை விம்பிள்டனில் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டார். ஆனால் இந்த தடவை அவ்வளவு சீக்கிரத்தில் அவர் ஜகா வாங்கி விட மாட்டார். தனது முதல் சுற்றில் அவர் சுலோவக்கியா வீரர் மார்ட்டின் கிளைஜானுடன் மோதுகிறார்.7 முறை விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றியவரான 4-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சமீப காலமாக பார்மில் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றதில்லை. இதனால் அவர் அரைஇறுதி வரை வந்தாலே பெரிய விஷயமாக இருக்கும்.அவர் முதல் ரவுண்டில் இத்தாலியின் பாலோ லோரென்சியை எதிர்கொள்கிறார். மற்றபடி சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, ஸ்பெயினின் டேவிட் பெரர், கனடாவின் மிலோஸ் ராவ்னிக், செக்குடியரசின் தாமஸ் பெர்டிச் உள்ளிட்டோரும் கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய தரப்பில் ஒற்றையர் பிரிவில் களம் காணும் ஒரே வீரரான சோம்தேவ் தேவ்வர்மன் முதல் சுற்றில் போலந்து வீரர் ஜானோவிச்சை சந்திக்கிறார். பெண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையும் 5 முறை சாம்பியனுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சுக்கே கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது.பிரெஞ்ச் ஓபனில் சொதப்பிய அவர், இங்கு ஒரு கைபார்த்து விட வேண்டும் என்ற உத்வேகத்தில் காணப்படுகிறார். முதல் சுற்றில் அவர் சக நாட்டவர் அன்னா தாதிஷ்விலியை எதிர்கொள்கிறார்.ரஷியாவின் மரிய ஷரபோவா, ருமேனியாவின் சிமோனா ஹலேப், சீனா லீ நா, போலந்தின் அக்னீஸ்கா ராத்வன்ஸ்கா, பெலாரசின் விக்டோரியா அஸரென்கா, செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா ஆகியோரும் பட்டத்திற்கான வாய்ப்பில் ஓடுகிறார்கள்.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.256 கோடியாகும். பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.18 கோடி வீதம் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.9 கோடி கிடைக்கும்.போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 முதல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி