செய்திகள்,திரையுலகம் நடிகை தமன்னா நடித்த ‘ஹம்சகல்ஸ்’ படமும் அவுட்!…

நடிகை தமன்னா நடித்த ‘ஹம்சகல்ஸ்’ படமும் அவுட்!…

நடிகை தமன்னா நடித்த ‘ஹம்சகல்ஸ்’ படமும் அவுட்!… post thumbnail image
மும்பை:-தமன்னா மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ‘ஹம்சகல்ஸ்’ இந்திப் படம் வெளியான முதல் நாளே படுதோல்விப் படமாக அமைந்து விட்டது. அவர் நடித்த முதல் படமான ‘ஹிம்மத்வாலா’ வும் படுதோல்வி அடைந்த நிலையில் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தார். ஆனால் படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பும், விமர்சகர்களின் வரவேற்பும் மிக மோசமாக அமைந்து விட்டது.

வட இந்திய பத்திரிகைகள், இணையதளங்கள் என அனைத்துமே படத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். பொதுவாக விமர்சனங்களுக்கு ‘ஸ்டார்’ வழங்கி தரத்தைக் குறிக்கும் அவை இந்த படத்திற்கு வெறும் ‘அரை ஸ்டார்’ மட்டுமே வழங்கியுள்ளன. சமீபகால இந்திப் படத்தில் இவ்வளவு மோசமாக எந்த படமும் விமர்சிக்கப்பட்டதில்லை என்கிறார்கள். முதல் பதினைந்து நிமிடம் கூட படத்தை உட்கார்ந்து பார்க்க முடியவில்லை என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்திற்கு கிடைத்துள்ள மிக மோசமான வரவேற்பு தமன்னாவை மிகவும் கவலையடைய வைத்துவிட்டதாம். இந்த படம் மூலம் எப்படியாவது இந்திப் பட உலகில் காலூன்றி விடலாம் என நினைத்திருந்தாராம்ரூமுக்குள்ளேயே அடைபட்டு அழுது கொண்டிருந்தார் என சொல்கிறார்கள். தனக்கும் இந்திப் படங்களுக்கும் ராசியில்லாமல் போகிறதே என வருத்தமடைந்தாராம். அடுத்து அக்ஷய் குமாருடன் ஜோடி சேர்ந்துள்ள படமாவது தனக்கு கை கொடுக்கும் என்று நம்புகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி