பிரேசிலை சேர்ந்த ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்த சாதனை வீரராக உள்ளார். 1998, 2002, 2006 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடி 15 கோல்கள் (19 ஆட்டம்) அடித்து உள்ளார்.
அவரது சாதனையை ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளூஸ் சமன் செய்தார். கானாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 71வது நிமிடத்தில் கோல் அடித்தார். அவர் 2002, 2006, 2010 ஆகிய 3 உலக கோப்பையில் ஆடி 14 கோல்களில் இருந்தார். நேற்றைய கோல் மூலம் 15 கோல்கள் அடித்து ரொனால்டோவை சமன் செய்தார்.
உலக கோப்பை போட்டியில் 10க்கும் மேற்பட்ட கோல்கள் அடித்த வீரர்கள் வருமாறு:–
ரொனால்டோ (பிரேசில்) – 15
மிரோஸ்லாவ் குளூஸ் (ஜெர்மனி) – 15
ஜெரால்டு முல்லர் (ஜெர்மனி) – 14
ஜஸ்ட் பான்டைன் (பிரான்ஸ்) – 13
பீலே (பிரேசில்) – 12
கோசிஸ் (அங்கேரி) – 11
கிளின்ஸ்மென் (ஜெர்மனி)- 11
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி