சென்னை:-கடந்த 12ம்தேதி இயக்குனர் விஜய், நடிகை அமலாபால் திருமணம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இதையடுத்து, இந்த புதுமண தம்பதியினர் தங்களது ஹனிமூனை கொண்டாட மாலத்தீவுக்குச் சென்றுள்ளனர்.
அங்கு, தனது கணவர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், அவர்கள் ஹனிமூனுக்காக ஏற்பாடு செய்திருந்த கட்டிலையும் படம் எடுத்த அமலாபால், அதை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிட்டு இருக்கிறார்.இந்தப் படங்களைப் பார்த்த ரசிகர்கள் உடனே தங்கள் ஆபாச கமெண்டுகளை அள்ளித் தெளிக்க ஆரம்பித்துவிட்டனர். நிலைமையை புரிந்துகொண்ட அமலா பால் வேகமாக அந்த புகைப்படத்தையெல்லாம் தனது வலைப்பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி