அந்த படம் வெளிவந்த போது மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் பின்னர் அந்தப் படம் வெகுவாக பேசப்பட்டது.அந்த காலகட்டத்தில் அவர்கள் இருவரும் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்ததால் அந்த படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். ஆனால், இப்போது இருவருமே சூப்பர் ஸ்டார்களாக இருக்கிறார்கள். அவர்களை சேர்த்து வைத்து நடிக்க வைப்பது சாதாரண விஷயமில்லை. அவர்கள் இருவருக்குமே இந்த இரண்டாம் பாகத்தில் இணைந்து நடிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது.
படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்ததும் அவர்களுடன் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.படத்தை மிகவும் நகைச்சுவையாக உருவாக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இனி, நான்தான் உழைக்க வேண்டும் என்று ராஜ்குமார் சந்தோஷி தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி