சென்னை:-கௌதம் மேனன் படத்தையடுத்து அஜித் வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவுடன் மீண்டும் இணையவுள்ளார்.இதற்கான கதை விவாதம் தற்போது சூடு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக சமந்தா நடிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சிறுத்தை சிவாவிற்கு தெலுங்கிலும் வரவேற்பு இருப்பதால் இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்க திட்டுமிட்டுள்ளாராம்.அதனால் தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் திரிஷாவின் காதலன் என்று கூறப்பட்ட ராணாவும் நடிக்கவிருக்கிறாராம்.கடந்த வருடத்தின் வெற்றி படமாக அமைந்த ஆரம்பம் படத்திலும் ராணா, அஜித்துடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி