செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ரூ.1,200 கோடி கிரெடிட் கார்டு மோசடி வழக்கில் இந்திய தொழில் அதிபர் குற்றவாளி!…

ரூ.1,200 கோடி கிரெடிட் கார்டு மோசடி வழக்கில் இந்திய தொழில் அதிபர் குற்றவாளி!…

ரூ.1,200 கோடி கிரெடிட் கார்டு மோசடி வழக்கில் இந்திய தொழில் அதிபர் குற்றவாளி!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவில் போலி ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டுகளை வாங்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் கடந்த ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த மிகப்பெரிய கிரெடிட் கார்டு மோசடி மூலம் வர்த்தகம் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,200 கோடி) அளவுக்கு இழப்பு ஏற்பட்டது
.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஏராளமான தொழிலதிபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அந்த வகையில் நியூஜெர்சியில் வசித்து வரும் வினோத் தட்லானி (வயது 51) என்பவரும் இதில் உடந்தையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியரான இவர் சொந்தமாக நகைக்கடை வைத்து நடத்தி வந்தார்.

வினோத் தட்லானி தனது தொழிலை இந்த மோசடிக்கு பயன்படுத்தி வந்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மோசடி வழக்கில் 17-வது நபராக சேர்க்கப்பட்ட இவர், குற்றவாளி என டிரெண்டன் பெடரல் நீதிமன்ற நீதிபதி அன்னி தாம்சன் தீர்ப்பு வழங்கினார். இவருக்கு அதிகபட்சமாக 30 ஆண்டு சிறையும், 1 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்படும் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி