விஜய்- சிம்ரன் நடித்த ஒன்ஸ் மோர் படம் மூலம் முறைப்படி பத்திரிக்கை மக்கள் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டார். கிட்டத்தட்ட விஜய் நடித்த 25 படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக இருந்திருக்கிறார். எல்லாருக்கும் சினிமாவில் ஒரு கனவு இருக்கும், எப்படியாவது விஜய் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் அல்லது விஜயை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று. செல்வகுமாருக்கு சொல்லதெரியாத ஆசையும் கனவும் அடி மனதில் ஆழமாய் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அவரே எதிர்ப்பார்க்க முடியாத வகையில் விஜய் ஒரு நல்ல காரியம் செய்துள்ளார். தன வளர்ச்சியில் தன்னோடு இருந்தவர்களை ,உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்க ஆசைப்பட்டு இருக்கிறார். அது ஜில்லா 100 ஆவது நாளில் நிறைவேற தொடங்கியது.அதாவது செல்வகுமாரை தன் அடுத்த படத்தில் தயாரிப்பாளர் ஆக்குவது என்பது.
இது அவரும் எவரும் நினைத்து பார்க்காத ஒன்று , தன்னை நம்பி இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்ததை எண்ணி ,இன்றும் அந்த பதட்டம் தனியாமலே இருக்கிறார் மக்கள் தொடர்பாளர். உலக அளவில் தன் மக்கள் தொடர்பாளருக்கு தயாரிப்பாளராக்கிய பெருந்தன்மை, விஜய்க்கு மட்டுமே உண்டு, என்னை இப்படி உயர்ந்த இடத்துக்கு கூட்டி போன, விஜய் சார்க்கு வெறும் நன்றியை மட்டும் ஒரே வார்த்தையில் சொல்லிட முடியாது; வாழ்நாளில் எப்போதும் நான் கடமை பட்டிருக்கிறேன் என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி