‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வெற்றிக்குப்பிறகு அந்த படத்தில் நடித்த சேது, விசாகா, சந்தானம் ஆகியோர் மீண்டும் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் படம் ‘வாலிப ராஜா’. இப்படத்தில் சந்தானம் மனநல மருத்துவராகவும், சேது டிசைனராகவும், விஷாகா மனநல மருத்துவம் படிக்கும் மாணவியாகவும் வருகிறார்.
இப்படத்தில் இவர்களோடு ஜெயப்பிரகாஷ், விடிவி கணேஷ், தேவதர்ஷினி, சந்தான பாரதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் நடித்துள்ளது. மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகை நுஸ்ரத் என்பவரும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாய் கோகுல் ராம்நாத். இவர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்தவர். இப்படத்தை வாங்ஸ் விஷன் ஒன் என்ற படநிறுவனம் தயாரிக்கிறது. லோகநாதன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ரதன் இசையமைத்திருக்கிறார்.
முழுநீள காமெடி பொழுதுபோக்கு படமாக உருவாகி வரும் இப்படத்தின் இசையை ஜூன் 25-ம் தேதி வெளியிடுகின்றனர். இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பாடல் சி.டி.யை வெளியிடுகின்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி