மும்பை:-ஐஸ்வர்யாராய், சுஷ்மிதாசென்,இருவரும் இணைந்து நடித்ததில்லை. உலக அழகிகள் ஆகி 15 வருடங்களுக்கு பிறகு இப்போது இரண்டு உலக அழகிகள் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.இதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இருவருமே ஒரே ஆண்டில் உலக அழகியானவர்கள்.
ஐஸ்வர்யா மிஸ் வோர்ல்ட் டைட்டிலையும் சுஷ்மிதா மிஸ்.யுனிவர்ஸ் டைட்டிலையும் வென்றவர்கள்.பிரபல இயக்குனர் பிரஹலாத் கக்கர் இயக்கப்போகும் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஹேப்பி அனிவர்சரி என்ற பெயர் வைத்திருக்கிறார். இந்த செய்தியினை சுஷ்மிதா தனது டுவிட்டரில் உறுதி படுத்தியிருக்கிறார்.ஐஸ்வர்யாராயுடன் இணைந்து நடிக்கும் நாளை சந்தோஷத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி