சென்னை:-நடிகர் ஜெய், விஜய் நடித்த பகவதி, யூத் படங்களில் சிறு வேடத்தில் தலைகாட்டியபோது தன்னை விஜய் ரசிகராகக் காட்டிக் கொண்டார் ஜெய்.சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்து கதாநாயகனாக வளர்ந்த பிறகு தன்னை அஜித் ரசிகராக அறிவித்துக்கொண்டார்.
அஜித் ரசிகர் என்று சும்மா சொல்லிக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் பல விஷயங்களில் அஜித் வழியிலேயே நடைபோடுகிறார் ஜெய். படத்தில் நடிப்பதோடு என் வேலை முடிந்து விட்டது, படத்தின் புரமோஷன் இசைவெளியீட்டு விழா எதற்கும் வர மாட்டேன் என்று அஜித் சொல்வதுபோலவே ஜெய்யும் சொல்லி வருகிறார்.
அடுத்ததாக, அஜித்தைப் போலவே கார் ரேஸ்களிலும் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சென்னைக்கு அருகில் உள்ள இருங்காட்டுக்கோட்டை என்ற இடத்துக் சென்று கார் ரேஸில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபடுகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி