படம் குறித்து இயக்குனர் கூறும்போது,
‘ரு’ என்ற தமிழ் எழுத்துக்கு ஐந்து என்று ஒரு அர்த்தம் உண்டு. இதிகாசம் முதல் சமீப காலம் வரை ஐந்து என்ற எண் மிகவும் முக்கியத்துவம் உள்ள எண்ணாகவே பார்க்கப்படுகிறது. சமூகத்தில் வாழக்கூடாத, வாழ தகுதி இல்லாத ஐந்து மனித மிருகங்களை வேட்டையாட விழைகிறான் ஒரு இளைஞன்.
சினிமாவில் நாயகனாக வர கனவு காணும் அவன், நிஜ வாழ்வில் நாயகனாக ஆகிறானா? என்பதை அந்த ஐந்து பேர்தான் தீர்மானிக்கின்றனர். சர்வதேச அரங்கில் நமது நாடு தலை குனிய வைக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை படம் பிடித்து காட்டும் படம்தான் ‘ரு’. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்து திரைக்குவர தயாராக இருக்கிறது என்றார்.
இப்படத்திற்கு ஸ்ரீநாத் இசையமைக்கிறார். நவீன் குமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஆனந்த் வீணா நிறுவனம் சார்பாக, வீணா ஆனந்த் தயாரிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி