சென்னை:-மைனா ஹிட்டுக்குப்பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய படம் கும்கி. அந்த படத்தையடுத்து, தற்போது கயல் என்ற படத்தை இயக்கி வருகிறார். சுனாமியின் பாதிப்புக்கு உள்ளான பகுதியை இதில் அவர் கதைக்களமாக்கியிருக்கிறார். ஆனால், சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப்பற்றிய கதையா? இல்லையா? என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்.
இந்த படத்திற்கு பிறகு தனக்கென ஒரு தனி பாணியில் புதிய கோணங்களில் படங்களை இயக்க வேண்டும் என்று சதா யோசித்துக்கொண்டேயிருக்கும் பிரபுசாலமனுக்கு, கும்கியில் யானையை மையமாக வைத்து படமாக்கியது போன்று அடுத்து சிங்கத்தை மையமாக வைத்து ஒரு படம் பண்ணும் ஆசையும் உள்ளதாம். ஆனால் அந்த முயற்சியில் எப்போது இறங்குவது என்று இன்னமும் முடிவெடுக்கவில்லையாம். கயல் படத்தின் ரிலீசுக்குப்பிறகுதான் உறுதியான முடிவெடுக்க உள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி