சென்னை:-தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் பெரிதும் மதிக்கும் விருதுகளில் ஒன்று பிலிம் பேர் விருது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழி படங்களுக்கு தனித்தனியே இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
2013ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 61வது பிலிம் பேர் விருது வழங்கும் விழா வருகிற ஜூலை 12ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது.இதில் 2013ம் ஆண்டு வெளிவந்த படங்களில் இருந்து சிறந்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளுக்காக 4 மொழிகளில் இருந்தும் 607 படங்கள் போட்டியிடுகிறது. விருதுக்கான படங்களையும், கலைஞர்களையும் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி விட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி