சென்னை:-1990களில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழின் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு நந்திகா என்ற குழந்தையும் உள்ளது.மீனாவின் தந்தை பெயர் துரைராஜ், அவருக்கு வயது 67. நேற்று இரவு மீனாவுடைய அப்பாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
வழியிலேயே அவர் மரணம் அடைந்தார். அவரது உடல் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள ஸ்ரீ நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி